அனைத்து அரச ஊழியர்களையும் சேவைக்கு அழைக்க தீர்மானம் – அரச சேவை, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு அறிவிப்பு!

Thursday, December 30th, 2021

எதிர்வரும் 3 ஆம் திகதிமுதல் அனைத்து அரச ஊழியர்களையும் சேவைக்கு அழைப்பதற்கு அரச சேவை, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு தீர்மானித்துள்ளது.

இது தொடர்பான சுற்றறிக்கை இன்று (30) வெளியிடப்படும் என அமைச்சின் செயலாளர் ஜே.ஜே. ரத்னசிறி தெரிவித்துள்ளார்.

கொரோனா தொற்று நிலைமை காரணமாக, கடந்த காலங்களில் அரச ஊழியர்கள் நிறுவனத் தலைவரின் அனுமதியுடன் பணி புரிவதற்கு அனுமதிக்கப்பட்டனர்.

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் வெளியிடப்பட்டுள்ள சுகாதார வழிகாட்டுதல்களுக்கு அமைவாக எதிர்வரும் 3ஆம் திகதி முதல் அரச சேவைகள் முழுமையாக முன்னெடுக்கப்படும் என அமைச்சின் செயலாளர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: