அனைத்துப் பாடசாலைகளிலும் சுற்றாடல் முன்னோடித் திட்டம் – கல்வியமைச்சு

Sunday, May 14th, 2017

மத்திய கல்வியமைச்சின் சுற்று நிருபத்திற்கமைவாக சிறுவர் சுற்றாடல் கழக நிகழ்ச்சித் திட்டமும், சுற்றாடல் முன்னோடி நிகழ்ச்சித் திட்டமும் இலங்கையிலுள்ள அனைத்துப் பாடசாலைகளிலும் நடைமுறைப்படுத்த வேண்டும் எனக் கல்வியமைச்சால் சுற்றுநிருபம் அனுப்பப்பட்டுள்ளது.

ஆரம்பக் கல்வித் பிரிவுப் பாடசாலைகளில் சிறுவர் சுற்றாடல் கழக நிகழ்ச்சித் திட்டமும், இடைநிலைப் பிரிவுப் பாடசாலைகளில் சுற்றாடல் முன்னோடி நிகழ்ச்சித் திட்டத்தையும் நடைமுறைப்படுத்த வேண்டும் என அந்தச் சுற்று நிரூபத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தச் சுற்று நிரூபத்திற்கமைய மாவட்டச்சுற்றாடல் ஆலோசகர், மத்திய சுற்றாடல் அதிகார சபை மற்றும் வலய மற்றும் கோட்ட சுற்றாடல் ஆணையாளர்கள் ஆகியோரையும் இணைத்துக் குறித்த திட்டங்களை முன்னெடுக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Related posts: