அனுராதபுரம் சிறைச்சாலையில் நான் கைதிகளை அச்சுறுத்தவில்லை – அவ்வாறு நடந்துகொள்வதற்கு நான் முட்டாளில்லை என லொகான் ரத்வத்தை தெரிவிப்பு!

Friday, September 17th, 2021

அனுராதபுரம் சிறைசசாலையில் தமிழ் அரசியல் கைதிகளை அச்சுறுத்தினார் என்ற குற்றச்சாட்டுக்குள்ளாகியுள்ளதன் மூலம் அரசாங்கத்திற்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ள இராஜாங்க அமைச்சர் லொகான் ரத்வத்தை தனக்கு எதிரான குற்றச்சாட்டுகளை நிராகரித்துள்ளதுடன் அவ்வாறு நடந்துகொள்வதற்கு நான் முட்டாளில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

அத்துடன் தான் அந்த சிறைச்சாலையில் கைதிகளை அச்சுறுத்தவில்லை என்றும் கண்காணிப்பு விஜயத்தையே மேற்கொண்டிருந்தேன் என அவர் தெரிவித்துள்ளார்.

எனினும் வெலிக்கடை சிறைச்சாலையின் தூக்குமேடைக்கு சென்றதை ஏற்றுக்கொண்டுள்ள இராஜாங்க அமைச்சர் தான் மதுபோதையில் பெண் ஒருவர் உட்பட் நண்பர்களுடன் சென்றதாக வெளியான குற்றச்சாட்டுகளையும் நிராகரித்துள்ளார்.

மேலும் அமைச்சர் என்ற அடிப்படையில் என்னால் எவ்வேளையும் சிறைச்சாலைக்குள் செல்ல முடியும், எவருடைய அனுமதியும் எனக்கு தேவையில்லை எனது பொறுப்பில் 29 சிறைகளும் இரண்டு புனர்வாழ்வு நிலையங்களும் உள்ளன, நான் இரவு பகல் எவ்வேளையிலும் அங்கு செல்ல முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.

சிறைச்சாலைக்குள் என்ன நடைபெறுகின்றது என்பதை அறியவிரும்புவதால் யாருக்கும் அறிவிக்காமலே நான் அங்குசெல்வேன் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

நான் சிறைகள் எரிந்துகொண்டிருந்த நேரத்தில் சிறைச்சாலைகள் விவகார இராஜாங்க அமைச்சராக பொறுப்பேற்றவன்.  நான் முழு அமைப்பையும் மாற்றினேன் சிறைச்சாலைக்குள் இடம்பெற்ற போதைப்பொருள் வியாபாரத்தை முறியடித்தேன் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

உள்ளே நடந்த கும்பல்களின் கொலைகளை நான் தடுத்து நிறுத்தினேன், அவர்களை நான் தனியா இடத்திற்கு மாற்றினனேன். அது எந்த இடம்என்பதை பாதுகாப்பு காரணமாக தெரிவிக்க முடியாது.

வழமையாக சிறைக்குள் போதைப்பொருட்களையும் செல்போன்களையும் கடத்துவார்கள். நான் உள்ளே போதைப்பொருள் செல்வதை தடுத்து நிறுத்தினேன். எனக்கு எதிரான குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய்யானவை எனவும் லொகான் ரத்வத்தை தெரிவித்துள்ளார்.

ஏனைய சிறைச்சாலைகளை போல அனுராதபுரம் சிறைக்கும் என்ன நடக்கின்றது என்பதை பார்க்கவே நான் சென்றேன், நான் சிறைக்கைதிகளை அச்சுறுத்தவில்லை அது எனது வேலையில்லை. நான் அவ்வாறு செய்பவன் இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: