அனல் மின் உற்பத்தி நிலையத்தின் இரண்டு இயந்திரங்கள் தற்காலிகமாக நிறுத்தம்!

Sunday, May 27th, 2018

நுரைச்சோலை அனல் மின் உற்பத்தி நிலையத்தின் இரண்டு மின் பிறப்பாக்கி இயந்திரங்களை தற்காலிகமாக நிறுத்துவதற்கு இலங்கை மின்சார சபை நடவடிக்கை எடுத்துள்ளது.

அத்தியவசிய திருத்தப் பணிகள் காரணமாகஇந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்றுமுதல் இரண்டாவது மற்றும் மூன்றாவது மின் பிறப்பாக்கி இயந்திரங்களை நிறுத்துவதற்கு தீர்மானித்ததாக குறித்த சபை கூறியுள்ளது.

அதன்படி தற்போது முதலாவது மின் பிறப்பாக்கி இயந்திரத்தின் மூலம் மாத்திரம் மின் உற்பத்தி செய்யப்படுவதாகவும், அதனூடாக தேசிய மின்சார கட்டமைப்புக்கு 200 மெகாவோல்ட் மின் இணைத்துக் கொள்ளப்படுவதாகவும் கூறப்பட்டுள்ளது.

முதலாவது மின் பிறப்பாக்கி இயந்திரத்தில் காணப்படுகின்ற தொழில்நுட்ப கோளாறு காரணமாக அதில் இருந்து முழுமையான மின்சாரத்தை உற்பத்தி செய்ய முடியாது என்று இலங்கை மின்சார சபை கூறியுள்ளது.

இந்த நாட்களில் தேவையான அளவு நீர் இருப்பதால் நூற்றுக்கு 55 வீதம் நீர் மின் உற்பத்தி செய்யப்படுகிறது.

இதேவேளை நுரைச்சோலை அனல் மின் உற்பத்தி நிலையத்தின் இரண்டாவது மற்றும் மூன்றாவது மின் பிறப்பாக்கி இயந்திரங்களை திருத்தம் செய்வதற்கு சுமார் 05 நாட்கள் எடுக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts: