அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட 6 இந்திய மீனவர்களையும் மார்ச் 4 ஆம் திகதி வரை வழக்கமறியலில் வைக்க ஊர்காவற்றுறை நீதிமன்றம் உத்தரவு!

Saturday, February 19th, 2022

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட 6 இந்திய மீனவர்களையும் மார்ச் மாதம் 4 ஆம் திகதி வரை சிறையில் அடைக்க ஊர்காவற்றுறை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது..

முன்பதாக நேற்று இரவு காரைநகர் கோவளம் கடற்பரப்பில் இந்திய மீனவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்ட இலங்கை கடற்படையினர் இந்தியாவைச் சேர்ந்த ஒரு படகையும் அதில் இருந்த 6 மீனவர்களையும் கைது செய்திருந்தனர்.

அதனையடுத்து கைது செய்யப்பட்டவர்கள் ஊர்காவற்துறை நீதிமன்றத்தில் மீனவர்கள் ஆஜர்படுத்தப்பட்ட போது வழக்கை விசாரித்த நீதிபதி கஜநிதிபாலன் மார்ச் மாதம் 4 ஆம் திகதி வரை சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.

இதனையடுத்து மீனவர்கள் 6 பேரும் யாழ்ப்பாணம் சிறைச்சாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

000

Related posts: