அத்திரலிய ரத்தின தேரரின் கடும் அழுத்தம் காரணமாக பதவி விலகிய ஆளுநர்கள்!

Monday, June 3rd, 2019

இலங்கையில் நடத்தப்பட்ட பயங்கரவாத குண்டுத் தாக்குதல்களை அடுத்து பெரும் சர்ச்சைக்கள்ளாகியிருந்த கிழக்கு மற்றும் வடமேல் மாகாண ஆளுநர்கள் இன்றையதினம் தமது பதவிகளை இராஜினாமா செய்துள்ளதாக தெரியவருகின்றது.

அமைச்சர் ரிசாட் பதியுதீன், ஆளுனர்கள் ஹிஸ்புல்லாஹ், அசாத் சாலி ஆகியோரை பதவிநீக்க கோரி ஆங்காங்கே போராட்டங்கள் இடம்பெற்று வருகின்றன. இதையடுத்து, முஸ்லிம் எம்.பிக்கள் அனைவரும் கொழும்பில் கலந்துரையாடலில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் மேல் மாகாண ஆளுநர் அசாத் சாலி மற்றும் கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லா ஆகியோர் தங்களது இராஜினாமா கடிதங்களை ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதற்கமைய , ஆளுநர்கள் இருவராலும் அனுப்பி வைக்கப்பட்டுள்ள கடிதங்களை ஜனாதிபதி பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார் என ஜனாதிபதி ஊடக பிரிவு குறிப்பிட்டுள்ளது.

Related posts: