அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய 1,800 கொள்கலன்கள் துறைமுகத்தில் தேக்கம் – இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவிப்பு!

Saturday, February 5th, 2022

அத்தியாவசிய உணவுப் பொருட்கள் அடங்கிய சுமார் 1,800 கொள்கலன்கள் கொழும்பு துறைமுகத்தில் தேங்கியுள்ளதாக, அத்தியாவசிய பொருட்கள் இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இவற்றில் சுமார் 500 அரிசி கொள்கலன்களும் தேங்கியுள்ளதாக  அத்தியாவசிய பொருட்கள் இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

அத்துடன், பருப்பு, சீனி, உருளைக்கிழங்கு, வெங்காயம் உள்ளிட்ட மேலும் பல உணவுப் பொருட்கள் அடங்கிய கொள்கலன்களும் துறைமுகத்தில் தேங்கியுள்ளதாக அந்த சங்கத்தினர் குறிப்பிட்டுள்ளனர்.

டொலர் தொடர்பான பிரச்சினை உள்ளமையால், குறித்த கொள்கலன்களை விடுவிக்க மத்திய வங்கி தலையிட வேண்டும் என்றும் அத்தியாவசிய பொருட்கள் இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: