அத்தியாவசியப் பொருட்களை அதிக விலைக்கு விற்பனை செய்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை – பொலிஸ் ஊடகப் பேச்சாளர் எச்சரிக்கை!

நாட்டின் தற்போதைய சூழ்நிலையில், அத்தியாவசியப் பொருட்களை அதிக விலைக்கு விற்பனை செய்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண எச்சரித்துள்ளார்.
ஊரடங்கு அமுலாகியுள்ள சில பகுதிகளில் அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களும் முகக் கவசங்களும் அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுவதாக தமக்கு தகவல் கிடைத்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
தற்போதைய சந்தர்ப்பங்களில் அவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடுவதை தவிர்க்குமாறு சம்பந்தப்பட்ட வர்த்தக தரப்பினருக்கு தாம் அறிவுறுத்துவதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்து தொடர்ந்து அவதானம் செலுத்தப்படுவதாகவும் இது தொடர்பில் நுகர்வோர் அதிகார சபைக்கு அறிவித்து அடுத்தக்கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
பாகிஸ்தானில் 100 பேர் உடல்கருகி பலி!
கொழும்பு - பாகிஸ்தான் விமான சேவைகள் நாளை முதல் ஆரம்பம்!
24 இலட்சம் குடும்பங்களுக்கு மாதாந்தம் 10 கிலோகிராம் அரிசியை இலவசமாக வழங்க தீர்மானம்
|
|