அத்தியாவசியப் பொருட்களின் விலை மேலும் குறையும் – வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவிப்பு!

Tuesday, March 14th, 2023

பண்டிகைக் காலத்தில் அத்தியாவசியப் பொருட்களின் விலை மேலும் குறையும் என வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

இதனூடாக இறக்குமதியாளர்களுக்கு பாதகமான நிலை ஏற்பட்டாலும் அதன் பயனை பொதுமக்களுக்கு வழங்குமாறு அவர் இறக்குமதியாளர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதேவேளை, ரூபாவின் பெறுமதி பலமடைந்துள்ளது என்று காண்பிக்கப்படுவது செயற்கையாக உருவாக்கப்பட்டதாக மக்கள் விடுதலை முன்னணியின் அரசியல் சபை உறுப்பினர் சுனில் ஹதுன்நெத்தி தெரிவித்துள்ளார்.

சில மக்கள் பிரதிநிதிகள் மக்கள் பிரச்சினைகளை புரிந்து கொண்டு செயற்படுவதில்லை என பொதுஜன பெரமுன நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் குமார நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது

00

Related posts: