அதிபர் இல்லாமல் இயங்குகிறது முத்துக்குமாரசாமி மகா வித்தியாலயம்!

Thursday, October 4th, 2018

கைதடியிலுள்ள ஒரேயொரு உயர்தரப் பாடசாலையான கைதடி முத்துக்குமாரசாமி மகாவித்தியாலயம் கடந்த சில மாதங்களாக அதிபர் இல்லாத நிலையில் இயங்கி வருவதாக பாடசாலை சமூகம் கவலை வெளியிட்டுள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரியவரவதாவது –

குறித்த பாடசாலையில் இதுவரை காலமும் கடமையாற்றிய அதிபர் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் சாவகச்சேரி டிறிபேக் கல்லூரிக்கு அதிபராக இடமாற்றம் பெற்றுச் சென்றிருந்தார்.

இதையடுத்து உப அதிபரே பாடசாலை நிர்வாகத்தை நடத்தி வந்தார். உப அதிபரும் அண்மையில் வேறொரு பாடசாலைக்கு அதிபராக நியமனம் பெற்றுச் சென்றுவிட்டார். இதையடுத்தே குறித்த பாடசாலை அதிபர்கள் இல்லாமல் இயங்கி வருகிறது.

இது தொடர்பாக தென்மராட்சி வலயக் கல்விப் பணிப்பாளரைத் தொடர்புகொண்டு கேட்டபோது குறித்த பாடசாலை 1சி தரத்தில் உள்ள பாடசாலை ஆகும். இந்த பாடசாலைக்கான அதிபர் நியமனத்தை மாகாண கல்வி அமைச்சு மேற்கொண்டுள்ளது. அந்த வகையில் அதிபருக்கான விண்ணப்பம் கோரப்பட்டு அவர்களுக்கான நேர்முகத் தேர்வும் நடைபெற்றுள்ளது. எனவே இன்னும் சில தினங்களில் அந்தப் பாடசாலைக்கு அதிபர் நியமிக்கப்படுவார் என தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: