அதிபர் – ஆசிரியர்களின் பிரச்சினைக்கு தீர்வாக மாதாந்தம் 5 ஆயிரம் ரூபா மேலதிக கொடுப்பனவு – அமைச்சரவையில் அங்கீகாரம்!

அதிபர் – ஆசிரியர்களுக்கான வேதன பிரச்சினைக்கு அடுத்த பாதீட்டில் தீர்வு வழங்கப்படும் வரை 5 ஆயிரம் ரூபா இடைக்கால மாதாந்த கொடுப்பனவை வழங்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
இதேவேளை, ஆசிரியர், அதிபர் வேதன முரண்பாட்டை தீர்ப்பதற்காக நியமிக்கப்பட்ட அமைச்சரவை உப குழு முன்வைத்த யோசனைக்கு நேற்றையதினம் அமைச்சரவை அனுமதி வழங்கியிருந்தது.
கொரோனா பரவல் காரணமாக, இணையவழி முறைமையில் குறித்த அமைச்சரவைக் கூட்டம் இடம்பெற்றது.
இதற்கமைய, அடுத்த பாதீட்டுடன், சில கட்டங்களின் அடிப்படையில், தீர்வு ஏற்படும் வகையில், ஆசிரியர், அதிபர்களின் வேதனம் அதிகரிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தத்துடன் இரண்டுமாதங்களிற்கு இதனை வழங்க நிதியமைச்சர் பசில் ராஜபக்ச இணங்கியுள்ளார் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.
இதனடிப்படையில் ஆசிரியர்கள் தங்கள் இணையவழி கல்வி நடவடிக்கைகளை ஆரம்பிக்கவேண்டும் என அரசாங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
எவ்வாறிருப்பினும், அமைச்சரவையின் தீர்மானம் ஏற்றுக்கொள்ளக்கூடியதாக இல்லை என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
அத்துடன் இது குறித்து ஆசிரியர், அதிபர் தொழிற்சங்கங்கள் இன்று கூடி ஆராய உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
000
Related posts:
|
|