அதிபர்கள் 150 பேருக்கு பதவியுயர்வு  44 பேர் தமிழர்!

Tuesday, March 20th, 2018

இலங்கையில் அதிபர் சேவை இரண்டுக்கு 150 பேர் பதவி உயர்வு பெற்றுள்ளனர் இவர்களில் 106 பேர் சிங்கள மொழி மூல அதிபர்களும் 44 பேர் தமிழ்மொழி மூல அதிபர்களுமாவார் கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் பதவி உயர்வு பெற்ற அதிபர்களுக்கான சான்றிதழ்களை வழங்கினார்

இவருடன் கல்வி இராஜாங்க அமைச்சர் வே. இராதா கிருஸ்ணன் கல்வி அமைச்சின் செயலாளர் சுனில் கெட்டியாராச்சி,  சிரேஸ்ட செயலாளர் அனுஷபட்டவகே , பிரத்தியேக செயலாளர் நாணயக்கார, மேலதிக செயலாளர், உதவி செயலாளர் உட்பட பலர் கலந்து கொண்டணர்

அதிபர்களுக்கான அறிவுறுத்தல் கூட்டம் பத்தரமுல்ல , இசறுபாயா நான்காம் மாடியில் அமைந்துள்ள கேட்பேர் கூட்டத்தில் நடைபெற்றது அந்த நிகழ்வில் மேலதிக செயலாளர் உரையாற்றும் போது ஆளணிப்பற்றாக்குறை காணப்படுவதால் மிக விரைவில் அதிபர் சேவை தரம் 111 இற்கும் கல்வி நிர்வாக சேவைப்பிரிவுக்கு ஆட்கள் திரட்டப்படுவார்கள் எனத் தெரிவித்தார்

Related posts: