அதிக வெப்பம் : யாழ்ப்பாணத்தில் வரட்சியினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு குடிநீருக்கு நிதி ஒதுக்கீடு!

Saturday, June 20th, 2020

யாழ் மாவட்டத்தில் அதிக வெப்பம் காரணமாக ஏற்பட்டுள்ள வறட்சியினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கான குடிநீர் விநியோகத்தினை மேற்கொள்வதற்காக பாதுகாப்பு அமைச்சின், தேசிய அனர்த்த நிவாரண சேவைகள் நிலையத்தினால் 7.5 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்த நிதி ஒதுக்கீடானது வேலணை, நெடுந்தீவு, ஊர்காவற்துறை, காரைநகர், சங்கானை மற்றும் சாவகச்சேரி ஆகிய பிரதேச செயலகங்களுக்கு உட்பட்ட 15419 குடும்பங்களைச் சேர்ந்த 50657 அங்கத்தவர்களின் வறட்சிக்கால குடிநீர் விநியோகத்திற்காக வழங்கப்பட்டு வருவதாக மாவட்ட செயலக அனர்த்த நிவாரண சேவைகள் நிலையத்தினால் அறிக்கை ஒன்று வெயிடப்பட்டுள்ளது

Related posts: