அதிக விலையில் பொருட்களை விற்கும் வர்த்தக நிலையங்கள் சுற்றிவளைப்பு!

Sunday, December 17th, 2017

எதிர்வரும் பண்டிகை காலத்தை முன்னிட்டு நுகர்வோருக்கு நியாயமான விலையில் பொருட்களை பெற்றுக் கொடுக்கும் நோக்கில் மோசடிகளை தவிர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இதுவரையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புகளின் படி 1500 வர்த்தக நிலையங்கள் சுற்றிவளைக்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது.

நாடளாவிய ரீதியாக உள்ள அதிகார சபையின் விசாரணை அதிகாரிகள் மோசடியான வர்த்தகர்கள் தொடர்பில் சுற்றிவளைப்புகளை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 6 ஆம் திகதி தொடக்கம் அமுலுக்கு வரும் வகையில் நுகர்வோர் விவகார அதிகார சபையினால் சில அத்தியாவசியப் பொருட்கள் கட்டுப்பாட்டு விலையில் தக்கவைத்துக் கொள்ளும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Related posts: