கிளிநொச்சி மாவட்டத்தின் பெரும்போக அறுவடையை சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்துவைத்தார் ஜனாதிபதி – கிலோ ஒன்று 100 ரூபா வீதம் அரசாங்கம் கொள்வனவு செய்யவுள்ளதாகவும் தெரிவிப்பு!

Sunday, February 12th, 2023

கிளிநொச்சி மாவட்டத்தின் பெரும்போக அறுவடையை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்து வைத்தார்.

கிளி. கண்டாவளை பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட பன்னங்கண்டியில் இடம்பெற்ற இந்நிகழ்வில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, ஜனாதிபதியின் பணிக்குழாம் பிரதானி சாகல ரட்ணாயக்கா, ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயங்க உட்பட பலரும் கலந்து கொண்டனர்

இந்நிலையில் அறுவடை செய்யப்படுகின்ற 20 வீதமான நெல்லை,  கிலோ ஒன்று 100 ரூபாய் வீதம் அரசாங்கம் கொள்வனவு செய்யவுள்ளதாக தெரிவித்துள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, இதற்காக 20 பில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

கிளிநொச்சி மாவட்டத்தில், பூங்காவனம் எனும் கிராமத்தில் பெரும்போக நெல் அறுவடையை ஆரம்பித்து வைத்த ஜனாதிபதி, பிரதேச விவசாயிகளுடன் கலந்துரையாடும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது

Related posts: