அதிக விலைக்கு மணலை விற்பனை செய்தால் வாகன உரிமையாளர்களின் உரிமங்கள் இரத்து – புவிச் சரிதவியல் அளவை மற்றும் சுரங்க பணியகம்!

Friday, June 5th, 2020

அதிக விலைக்கு மணலை விற்கும் வாகன உரிமையாளர்களின் உரிமங்கள் ரத்து செய்யப்படுவதாக புவிச் சரிதவியல் அளவை மற்றும் சுரங்க பணியகம் தெரிவித்துள்ளது.

மணல் அகழ்வு மற்றும் போக்குவரத்து உரிமத்தைப் பெற்றுள்ள வாகன உரிமையாளர்கள், மணலை பதிக்கி வைப்பதுடன், அதிக விலைக்கு விற்பனை செய்வதாகக் கிடைத்துள்ள முறைப்பாடுகளையடுத்து இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக பணியகம் சுட்டிக்காட்டியுள்ளது.

மணலை அதிக விலைக்கு விற்பனை செய்வோர் தொடர்பில் பொதுமக்கள் தங்களது மாவட்டத்தில் உள்ள புவிச் சரிதவியல் அளவை மற்றும் சுரங்க பணியகத்துக்கு அறிவித்தால் கொள்ளை இலாபம் பெறும் வியாபாரிகளின் உரிமைத்தை ரத்துச் செய்ய முடியும் என்றும் பணியகம் குறிப்பிட்டுள்ளது.

Related posts: