அதிக இலங்கையர்கள் குவைத்தின் பொது மன்னிப்பு காலத்தில் நாடு திரும்பல்!

Thursday, March 8th, 2018

குவைட் நாட்டில் சட்டவிரோதமாக தங்கியுள்ளவர்கள் வெளியேறுவதற்காக அந்நாட்டு அரசாங்கம் அறிவித்துள்ள பொதுமன்னிப்பு காலத்தில், 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இலங்கையர்கள் நாடு திரும்பியுள்ளதாக குவைட்டில் உள்ள இலங்கைத் தூதுவர் காண்டீபன் பாலசுப்ரமணியம் தெரிவித்துள்ளார்.

சட்டவிரோதமாக குவைட்டில் தங்கியுள்ளவர்களை தங்களது சொந்த நாடுகளுக்கு திரும்பவும் மற்றும் தங்களை பதிவு செய்து கொள்ளவும் இந்த பொதுமன்னிப்புக் காலம்அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தக் காலப்பகுதியில் குவைட்டில் உள்ள இலங்கைத் தூதரகத்தினால் 7500 புதிய கடவுச் சீட்டுகள் விநியோகிக்கப்பட்டுள்ளதுடன், நாளாந்தம் 75 புதிய கடவுச் சீட்டுக்கானவிண்ணப்பங்கள் கிடைக்கப்பெறுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை இந்த பொதுமன்னிப்பு காலத்தினால் 8000க்கும் அதிகமான இலங்கையர்கள் அனுகூலமடைவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

எதிர்வரும் ஏப்ரல் மாதம் 22ம் திகதி வரை இந்த பொதுமன்னிப்புக் காலம் நீடிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: