அதிகரிக்கும் குற்றச்செயல்களை கட்டுப்படுத்த துரிதகதியில் நடவடிக்கை!

Wednesday, May 25th, 2016
யாழ்.மாவட்­டத்தில் அதி­க­ரித்­துள்ள வாள்­வெட்டு உள்­ளிட்ட குற்றச் செயல்கள் மற்றும் வன்முறைச்­சம்­ப­வங்கள் உடன்கட்டுப்பாட்டிற்குள் கொண்­டு­வ­ரப்­ப­டு­வ­தோடு சம்­பந்­தப்­பட்ட அனைவரும் கைது செய்­யப்­ப­டு­வார்கள் என பொலிஸ் மா அதிபர் பூஜித ஜெய­சுந்­தர உறுதியளித்துள்ளார்.

அமைச்சர் டி.எம்.சுவா­மி­நாதன் அகில இலங்கை இந்து மாமன்­றத்தின் தலைவர் கந்­தையா நீலகண்டன் உள்­ளிட்ட புத்தி­ஜீ­விகள் குழு­விடம் மேற்­கு­றித்த உறு­தி­ய­ளிப்பை பொலிஸ் மா அதிபர் பூஜித்த ஜெய­சுந்­தர நேற்று வழங்கியுள்ளார்.

சிறைச்­சா­லைகள் மறு­சீ­ர­மைப்பு மீள்­கு­டி­யேற்றம் புனர்­வாழ்­வ­ளிப்பு மற்றும் இந்து சமய அலு­வல்கள் அமைச்சில் நேற்று செவ்­வாய்க்­கி­ழமை பொலிஸ் மா அதிபர் பூஜித்த ஜெய­சுந்­த­ர­விற்கும் அமைச்சர் டி.எம்.சுவா­மி­நதான் மற்றும் அகில இலங்கை இந்து மாமன்­றத்தின் தலைவர் கந்­தையா நீல­கண்டன் உள்­ளிட்ட குழு­வி­ன­ருக்­கு­மி­டை­யி­லான இந்த சந்­திப்பு நடை­பெற்­றது.

சந்­திப்­பின்­போது யாழ் மாவட்­டத்தில் அண்­மைக்­கா­ல­மாக அதி­க­ரித்­துள்ள வாள்வெட்டுச்சம்பவங்கள் ஆவா உள்­ளிட்ட குழுக்­களின் குற்­றச்­செ­யல்கள் மற்றும் வன்முறைச்சம்ப­வங்கள் போன்­ற­வற்றை உடன் கட்­டுப்­பாட்­டுக்குள் கொண்டுவ­ருதல், பொது­மக்கள் பாது­காப்பு நிலை­மைகள் தொடர்­பாக விரி­வாக ஆரா­யப்­பட்­டது.

இதன்­போது பொலிஸ் மா அதிபர் பூஜித ஜெய­சுந்­தர, குறித்த விட­யங்கள் தொடர்­பாக அதிக கவனம் செலுத்­து­வ­தாக தெரி­வித்­த­தோடு சம்­ப­வங்­க­ளுடன் தொடர்­பு­பட்ட சிலர் கைது செய்யப்பட்டுள்ளமையையும் சுட்­டிக்­காட்­டினார். அத்துடன் வாள்­வெட்டு மற்றும் வன்­முறைச் சம்பவங்­க­ளுடன் தொடர்­பு­டைய அனை­வரும் கைது செய்­யப்­ப­டு­வார்கள் எனவும் அவர் உறுதியளித்தார்.

இச்­சந்­திப்பு தொடர்­பாக கருத்து வெ ளியிட்ட அமைச்சர் டி.எம்.சுவா­மி­நாதன், பொலிஸ்மா அதிபருடனான சந்­திப்பு திருப்­தி­க­ர­மாக அமைந்­தி­ருந்­தது. யாழில் இடம்­பெறும் குற்றச் சம்பவங்களை கட்­டுப்­ப­டுத்த வேண்டும் என்­பதில் எமது கருத்­தோடு பொலிஸ்மா அதி­பரும் இணங்கி­யுள்ளார். அத்­தோடு பொலிஸ் மா அதிபர் இவ்­வி­ட­யத்தில் நேர­டி­யாக தலை­யீடு செய்யவேண்­டு­மென கோரிக்கை விடுத்துள்ளேன். இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறுகின்றபோது பொதுமக்கள் உடனடியாக பொலிஸாருக்கு அறிவிக்க கூடிய வகையிலான தமிழ் மொழியிலான துரித தொலைபேசி அழைப்பு வசதிகளை ஏற்படுத்தவேண்டுமெனக் கோரியுள்ளேன் என்றார்

Related posts:


பல்கலைகழக வெட்டுப்புள்ளி தொடர்பில் - தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனுக்களை விசாரணைக்கு உட்படுத...
இலங்கையின் எல்லைப்பகுதியில் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபடபோவதில்லை - இராமேஸ்வரம் மீனவர்கள் அறிவிப்பு!
உக்ரைன் பேச்சுவார்த்தைக்கு அனைத்து தரப்பினரும் ஆதரவு அளிக்க வேண்டும் – சீன அதிபர் ஜி ஜின்பிங் அமெரிக...