அரச – தனியார்துறை ஊழியர்களை வீட்டிலிருந்தே வேலை செய்ய ஊக்குவிக்க வேண்டும் – கல்வி அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவிப்பு!

Thursday, January 13th, 2022

நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி அரச மற்றும் தனியார் துறை ஊழியர்களை வீட்டிலிருந்து வேலை செய்ய ஊக்குவிப்பதன் மூலம் பெறுமதியான நேரத்தை மீதப்படுத்துவதுடன் தேவையற்ற செலவீனங்களையும் குறைக்க முடியும் என கல்வி அமைச்சரான தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.

கொரோனா தொற்று நோய்களின் போது பெருமளவிலான அரசதுறை ஊழியர்கள் வீட்டிலிருந்து வேலை செய்ததால், பெறுமதியான தொழில்நுட்பப் பாடங்களை அவர்களால் பெற முடிந்ததாகவும் அவர் தெரிவித்தார்.

மஹரகமவில் இடம்பெற்ற பட்டதாரிகள் குழுவுக்கான நியமனங்களை வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும் அன்றாட நடவடிக்கைகளில் புதிய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதன் முக்கியத்துவம் தொடர்பிலும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

உச்சக்கட்ட தொற்றுநோயின்போது பொதுமுடக்கலை விதிக்க அரசாங்கம் கட்டாயப்படுத்தப்பட்டது. மேலும் அரச மற்றும் தனியார்துறை ஊழியர்கள் வீட்டிலிருந்து வேலை செய்ய நிர்ப்பந்திக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

தொழிலாளர்கள் நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி தங்களது பணிகளை செய்து முடித்தனர்.

புதிய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதன் மூலம் சில செயற்பாடுகளை வீட்டில் இருந்தபடியே செய்து முடிக்க முடியும் என்பதை அந்தக் காலகட்டத்தின் ஊடாக உணர்ந்து கொண்டதாகவும் அவர் இதன் போது குறிப்பிட்டுள்ளார்..

எனவே புதிய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி திறமையான அரச சேவையை உருவாக்குவது புத்திசாலித்தனமானது.

அண்மையில் நிரந்தர வேலைவாய்ப்பைப் பெற்ற 52 ஆயிரம் பட்டதாரிகளில் சுமார் 24 ஆயிரம் பேர் கல்வித்துறைக்கு ஆட்சேர்ப்பு செய்யப்பட்டுள்ளனர் எனவும் தெரிவித்த கல்வி அமைச்சர் நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி பணியாளர்கள் நாட்டுக்கும் மக்களுக்கும் நன்மை பயக்க வேண்டும் எனவும் அவர் இதன்போது வலியுறுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts: