அட்டுலுகம சிறுமியின் மரணம் தொடர்பான விசாரணை அறிக்கைகள் குற்றப்புலனாய்வு அதிகாரிகளிடம் ஒப்படைப்பு!
Sunday, May 29th, 2022
பண்டாரகம – அட்டுலுகம சிறுமியின் மரணம் தொடர்பான விசாரணை அறிக்கைகள் குற்றப்புலனாய்வு அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக, காவல்துறை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
பண்டாரகம – அட்டுலுகமவை சேர்ந்த 9 வயதான குறித்த சிறுமி நேற்றுமுன்தினம் காணாமல் போன நிலையில், நேற்று சடலமாக மீட்கப்பட்டார்.
இதனை தொடர்ந்து, சிறுமியின் மரணம் தொடர்பான விசாரணைகளுக்காக 3 காவல்துறை குழுக்கள் நியமிக்கப்பட்டிருந்தன.
இந்நிலையில் காவல்துறையினரின் விசாரணை அறிக்கைகள் குற்றப்புலனாய்வு அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
நாட்டை பசுமை பொருளாதார சமூகமாக மாற்றுவதற்கான ஜனாதிபதி செயலணி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவினால் உருவாக்...
சர்வதேச நாணய நிதியத்துடனான ஒப்பந்தத்தில் முக்கிய விடயங்கள் சட்டமாக்கப்படும் - ஜனாதிபதி ரணில் விக்ரமச...
சுற்றுலாத்துறையின் வளர்ச்சிக்கு "Pekoe trail" திட்டத்தை வெற்றியடையச் செய்ய வேண்டும் - ஜனா...
|
|
|


