அடுத்த வாரம் ரயில் போக்குவரத்தை அத்தியாவசிய சேவையாக மாற்றும் வர்த்தமானியை வெளியிட அமைச்சு திட்டம்!

Tuesday, August 14th, 2018

இலங்கையில் ரயில்வே போக்குவரத்து சேவையை அத்தியாவசிய சேவையாக மாற்றுவதற்கான வர்த்தமானியை அடுத்த வாரம் வெளியிடுவதற்கு போக்குவரத்து அமைச்சு திட்டமிட்டுள்ளது.

தற்போது நாடு முழுவதும் பணி பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ள ரயில்வே ஊழியர்கள் சேவைக்கு வருகை தரவில்லை. எனினும் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்றைய தினத்திற்கு முன்னர் அனைத்து ரயில்வே ஊழியர்களும் பணிக்கு திரும்ப வேண்டும். அவ்வாறு திரும்பாவிடின் கடுமையான தீர்மானம் மேற்கொள்ளப்படும் என போக்குவரத்து அமைச்சர் தெரிவித்தார்.

அத்துடன் ரயில்வேயின் உத்தியோகபூர்வ இல்லத்தில் வசிக்கும் ஊழியர்களையும் அதிலிருந்து நீக்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.

இந்த நிலையில் தொழிற்சங்க நடவடிக்கைகளை தடுப்பதற்கு முன்னர் தங்கள் பிரச்சினைக்கு உடனடியாகத் தீர்வு வழங்குமாறு ரயில் எஞ்சின் சாரதிகள் சங்கத்தின் செயலாளர் இந்திக்க தொடங்கொட தெரிவித்துள்ளார்.

கடந்த ஐந்து நாட்களாக நாடளாவிய ரீதியாக முன்னெடுத்து வரும் ரயில்வே தொழிற்சங்க நடவடிக்கை காரணமாக 10 கோடி ரூபா அரசாங்கத்திற்கு நட்டம் ஏற்பட்டுள்ளது. அத்துடன் நாட்டு மக்களும் பெரும் நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: