அடுத்த மூன்று நாட்களுக்குள் எரிபொருளுக்கு வரிசையில் நிற்கும் நிலை முற்றுப்பெறும் – மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு நம்பிக்கை!

Monday, April 25th, 2022

எதிர்வரும் மூன்று நாட்களுக்குள் இலங்கைக்குக் கிடைக்க உள்ள எண்ணெய் கையிருப்பு காரணமாக எரிபொருள் வரிசை முடிவுக்கு வரும் என்று மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு நம்பிக்கை தெரிவித்துள்ளது.

அடுத்த மூன்று நாட்களுக்குள் டீசல் மற்றும் பெற்றோல் கப்பல்கள் நாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதன்படி, டீசல், சூப்பர் டீசல், பெற்றோல் 92 மற்றும் 95 மற்றும் மசகு எண்ணெய் ஆகியவற்றின் போதுமான அளவு கையிருப்பு நாட்டிற்கு கிடைக்க உள்ளது.

பல மாதங்களாக நீடித்து வந்த எரிபொருள் வரிசைகள் படிப்படியாக குறைந்து வருவதாக மின்சக்தி அமைச்சு தெரிவித்தது.

மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சராக கஞ்சன விஜேசேகர தனது கடமைகளை அண்மையில் பொறுப்பேற்றார்.

எரிபொருள் விநியோக செயல்முறையை மீளமைத்து துரிதப்படுத்துவதற்காக, இராணுவம், விமானப்படை, பொலிஸ், புகையிரத திணைக்களம் மற்றும் ஏனைய தரப்பினர்களை உள்ளடக்கிய 24 மணிநேர செயற்பாட்டு மையம் நிறுவப்பட்டுள்ளது.

கொலன்னாவ எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் அண்மையில் விசேட கூட்டம் நடைபெற்றது. 

இதேவேளை, பெற்றோல் நிலைய உரிமையாளர்கள் சங்கம் மற்றும் பெற்றோல் தாங்கி பவுசர் போக்குவரத்து சங்கத்தின் பிரதிநிதிகளுடன் அமைச்சர் அண்மையில் கலந்துரையாடினார்.

அதன்படி, சரியான நேரத்தில் கொள்முதல் பெற நடவடிக்கை எடுத்தல், கொள்வனவு செய்யும் செயல்முறையை ஒழுங்குபடுத்துதல், காலை மற்றும் மாலை ஆகிய இருவேளைகளிலும் நிரப்பு நிலைய இருப்பு பற்றிய விழிப்புணர்வு அளித்தல், டிப்போ மற்றும் எண்ணெய் கிடங்குள் மூலம் விநியோகத்தை விரைவுபடுத்துதல் மற்றும் நிரப்பு நிலையங்களினூடாக எரிபொருள் விநியோகத்தை அதிகரிக்கவும் முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: