அடுத்த ஆண்டு வைத்தியர்களுக்கு தட்டுப்பாடு – மருத்துவ சபை!

சைட்டம் குறித்த சர்ச்சையினை முன்வைத்து வைத்தியத் துறை மாணவர்கள் அனைவரும் வகுப்புப் புறக்கணிப்பில் ஈடுபடுவதால் 2018ஆம் ஆண்டு வைத்தியர்களில் தட்டுப்பாடு ஏற்படுவதினை தவிர்க்க முடியாது என இலங்கை மருத்துவ சபை அறிவித்துள்ளது.
மேலும், பரீட்சை நடவடிக்கைகளில் இருந்து வைத்தியர்கள் தவிர்ந்திருப்பதால் வெளிநாட்டு மருத்துவ பட்டப்படிப்பினை தொடரவுள்ள மாணவர்களும் அசௌகரியங்களுக்கு முகங்கொடுக்க நேரிட்டுள்ளதாக அச்சபை தெரிவித்துள்ளது. எவ்வாறாயினும். குறித்த சர்ச்சை முடிவுக்கு வரும் வரையில் கல்வி நடவடிக்கைகளில் 80% ஆனோர் பங்குபற்ற மாட்டார்கள் என்பதால் இறுதியாண்டு மாணவர்கள் இறுதிப் பரீட்சைக்கு தோற்றுவதற்கு பயிற்சி பெற மாட்டார்கள் என குறித்த சங்கம் மேலும் தெரிவித்துள்ளது.
Related posts:
மக்களின் வறுமையை விலைபேச நாம் ஒருபோதும் அனுமதிக்கமாட்டோம் - ஈ.பி.டி.பியின் வடமராட்சி அமைப்பாளர் ஸ்ரீ...
ஆசிரிய இடமாற்றங்களை இனிமேல் வருட இறுதியில் செயற்படுத்துங்கள்!
பயங்கரவாத அச்சுறுத்தல் இன்னும் முடியவில்லை - இராணுவ தளபதி!
|
|