அடுத்த ஆண்டு பெப்ரவரி வரை பிற்போடப்பட்டது க.பொ.த. சாதாரண தரப்பரீட்சை – கல்வி அமைச்சர் ஜீ.எல் பீரிஸ் அறிவிப்பு!

Monday, July 26th, 2021

2021 ஆம் ஆண்டிற்காக கல்விப் பொதுத்தராதர சாதாரண தர பரீட்சையை ஒத்திவைக்க கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.

அதனடிப்படையில் 2022 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 21 ஆம் திகதிமுதல் மார்ச் மாதம் 3 ஆம் திகதிவரையில் குறித்த பரீட்சையை நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் ஜீ.எல் பீரிஸ் தெரிவித்துள்ளார்.

இன்று (26) காலை கொழும்பு இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதேவேளை தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை எதிர்வரும் நவம்பர் மாதம் 14 ஆம் திகதி இடம்பெறவுள்ளது.

மேலும் உயர்தரப் பரீட்சை நவம்பர் மாதம் 5 ஆம் திகதி முதல் டிசம்பர் 10 வரை நடைபெறும் என ஏற்கனவே கல்வி அமைச்சர் ஜீ.எல். பீரிஸ் அறிவித்திருந்தமை குறிப்பிடததக்கது.

அத்துடன் கொரோனா நிலமையை கருத்திற் கொண்டே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: