அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதத்திற்குள் பொருட்களின் விலைப் பிரச்சினை தீர்க்கப்படும் – இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம நம்பிக்கை!

Thursday, November 18th, 2021

2022 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்திற்குள் பொருட்களின் விலைப் பிரச்சினை தீர்க்கப்படும் என இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் குறித்து ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட இராஜாங்க அமைச்சர்,மேலும் தெரிவிக்கையில் –

தற்போதுள்ள பொருட்களின் விலை தொடர்பான பிரச்சினை, கொரோனா நிலைமையின் விளைவாகும் என்றும் இது உலகளாவிய பிரச்சினையாகும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்திற்கு வருவாயைப் பெறுவதற்கான வழிகள் மற்றும் விலை ஏற்ற இறக்கங்களை நிர்வகிப்பதற்கான வழிகளை நிதியமைச்சர் எடுத்துக்காட்டியதாகவும் தெரிவித்த இராஜாங்க அமைச்சர், ஏப்ரல் 2022 க்குள் நிலைமை கட்டுப்பாட்டுக்குள் வந்துவிடுமெனவும் நம்பிக்கை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: