அச்சுவேலி வல்லையில் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட குடும்ப பெண் கைது!

Saturday, March 16th, 2024

சிறுவர்கள், பாடசாலை மாணவர்களை  இலக்கு வைத்து அச்சுவேலி வல்லைப் பகுதியில் போதை பாக்கு விற்பனையில் ஈடுபட்டு வந்த குடும்பப் பெண் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது

கோப்பாய் செயலாளர் பிரிவில்  உள்ள உத்தியோகத்தர்கள் குறித்த வீட்டினை சோதனை இட்ட பொழுது, பொட்டலங்களாக சுத்தி வைக்கப்பட்டிருந்த மாவா பாக்குகள் கைப்பற்றப்பட்டுள்ளன. அத்துடன் 1500 மில்லிலீற்றர் கசிப்பு போத்தலும் கைப்பற்றப்பட்டுள்ளது .

குறித்த வீட்டில் தொடர்ச்சியாக சட்டவிரோத கசிப்பு உற்பத்தி போதைப் பாக்கு விற்பனை என்பன இடம்பெற்று வருவதாக பிரதேச செயலகத்துக்கு முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்ற வண்ணம் உள்ளன.

அத்துடன் பெண் பிள்ளைகளை பயன்படுத்தி இவ்வாறு சூட்சுமமான  முறையில் பாக்கு விற்பனை இடம் பெற்று வருவதாக கூறப்படுகிறது.

வல்லலைப் பகுதியில் இவ்வாறான செயற்பாடுகள் பல்வேறு வீடுகளில் இடம் பெற்று வருவதாகவும் முறைப்பாடுகள் தெரிவிக்கின்றன.

கைது செய்யப்பட்ட பெண்ணை மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

000

Related posts: