அச்சுவேலி கைத்தொழில் பேட்டையில் தற்போது ஐந்து நிறுவனங்களே இயங்குகின்றன!

Thursday, July 26th, 2018

அச்சுவேலி தொழில் பேட்டையை மீளவும் கட்டியெழுப்ப 100 மில்லியன் ரூபா கிடைத்துள்ளது. இங்கே தற்போது 39 காணித் துண்டங்களில் 13 நிறுவனங்கள் நிலத்தைப் பெற்றபோதும் 5 நிறுவனங்களே இயங்குகின்றன என்று தொழில்த் திணைக்கள அதிகாரி தெரிவித்தார்.

அச்சுவேலித் தொழில்பேட்டையானது 1972 இல் ஆரம்பித்து பின்னர் 2 ஆயிரம் பணியாளர்களுடன் இயங்கியது. ஆனால் தற்போது 5 நிறுவனங்கள் மட்டுமே இயங்குகின்றன. 2012 இல் மீள ஆரம்பிக்கப்பட்ட பின்பு தற்போது மின்சாரச் சலுகை வழங்கப்படுகின்றது. அதில் ஒரு நிறுவனத்துக்கு மட்டும் 4 இலட்சத்து 50 ஆயிரம் ரூபா மின்சாரப் பட்டியல் வரும் நிலையில் அதில் 50 சதவீதம் சலுகை வழங்கப்படுகின்றது. அவ்வாறே அனைவருக்கும் வழங்கப்படும். அதனால் ஏனையோரும் முன்வர வேண்டும்.

அச்சுவேலித் தொழில்பேட்டைக்கு மொத்தம் 65 ஏக்கர் நிலம் உள்ளது. இதில் 25 ஏக்கரே தற்போது பயன்பாட்டில் உள்ளது. இதனால் மேலும் 22 ஏக்கர் நிலம் துப்புரவு செய்ய நடவடிக்கை இடம்பெறுகின்றது.


உரிய பகுதிக்கே தகவல்களை பெற்றுக்கொள்வதற்கு விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டும் - தகவல் திணைக்கள பணிப்ப...
மீனவர் மீது தாக்குதல்: மறுக்கிறது கடற்படை!
கிழக்கின் வறிய மாணவர்களின் கற்றலுக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் பிரான்ஸ் கிளை உதவிக்கரம்!
யாழில் போதைக்கு அடிமையான 17 வயது மாணவன் - மறுவாழ்வுக்கு அனுப்புமாறு நீதிமன்றம் உத்தரவு!
மீண்டும் அமைச்சுப் பதவிகளை ஏற்றுக் கொண்ட முஸ்லிம் அரசியல்வாதிகள்!