அக்ரஹார தேசிய காப்புறுதி நிதியத்தின் அங்கத்தவர்கள் 22 ஆயிரம் பேருக்கு காப்புறுதி உதவி கொடுப்பனவு வழங்கப்பட்டது!
Thursday, December 30th, 2021கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்ட அக்ரஹார தேசிய காப்புறுதி நிதியத்தின் அங்கத்தவர்கள் 22 ஆயிரம் பேருக்கு காப்புறுதி உதவி கொடுப்பனவு வழங்கப்பட்டுள்ளது.
இதற்காக 66 கோடி ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
கொரோனா தொற்று ஏற்பட்ட அரச சேவையாளர்கள், பகுதியளவில் பாதிக்கப்பட்ட அரச சேவையாளர்கள் மற்றும் ஓய்வுபெற்ற அரச சேவையாளர்கள் என காப்புறுதி நன்மைகளை பெறுவதற்காக 42 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர்.
இவர்களுள் 22 ஆயிரம் பேருக்கு கொடுப்பனவுகள் வழங்கப்பட்டுள்ளன, ஏனையோருக்கு கொடுப்பனவுகளை வழங்குவதற்கான நடவடிக்கைள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
கொரோனா தொற்றுக்கு உள்ளாகி, வைத்தியசாலை அல்லது அரசாங்கத்தால் ஏற்றுக் கொள்ளப்பட்ட தனிமைப்படுத்தல் மத்திய நிலையத்தில் சிகிச்சை பெற்றவர்கள் மாத்திரம் அக்ரஹார காப்புறுதியை பெற தகுதியுடையவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
Related posts:
ஐக்கியத்தை ஏற்படுத்துவதற்காக அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் - பிரதமர்!
இலங்கை - இந்திய வெளிவிவகார அமைச்சர்களுக்கு இடையே சந்திப்பு!
வடக்கில் இன்றுமுதல் கள் விற்பனை நிலையங்களை திறக்க அனுமதி - பனை அபிவிருத்தி சபையின் தலைவர் கிரிசாந்த ...
|
|
நாட்டை கடல்சார் கேந்திர நிலையமாக மாற்றி ஆசியாவின் பலம் வாய்ந்த நாடாக முன்னோக்கி செல்வோம் - பிரதமர் ...
நாட்டில் நிதி இல்லை,தேர்தல் தொடர்பில் ஆணைக்குழு தீர்மானிக்கும் - மனுச நாணயகார யாழ்ப்பாணத்தில் தெரிவி...
கத்தோலிக்க ஆயர் சங்கப் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடுவதற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தயார் - ஜனாதிபத...