70 தாதிய உத்தியோகத்தர்கள் வடக்கில் புதிதாக நியமனம்!

Saturday, February 2nd, 2019

தாதியப்பயிற்சி நெறியை நிறைவு செய்த 70 பேருக்கு வடக்கு மாகாண வைத்தியசாலைகளில் பணியாற்ற நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் ஆயிரத்து 660 தாதிய உத்தியோகத்தர்களுக்கு நேற்று நியமனம் வழங்கப்பட்டுள்ளது. அதில் 70 பேருக்கு வடக்கு மாகாணத்தில் நியமனம் வழங்கப்பட்டுள்ளது என்று சுகாதார அமைச்சின் தாதியக் கற்கைகள் பிரிவின் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

முதன்முறையாக சுகாதார அமைச்சின் கல்வி மற்றும் ஆய்வுப் பிரிவின் நிதியில் தாதிய மாணவர்களுக்கான பட்டமளிப்பு விழா நேற்று அலரிமாளிகையில் நடத்தப்பட்டது. அவர்களுக்கான நியமனமும் சுகாதார அமைச்சர் மருத்துவர் ராஜித சேனாரத்னவால் வழங்கப்பட்டது.

Related posts: