450 இலங்கை அகதிகள் நாடு திரும்பியுள்ளனர்!

Sunday, September 4th, 2016

இந்தியாவில் தங்கியிருந்த இலங்கை அகதிகளில் 452 பேர் இதுவரை நாடு திரும்பியுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகளுக்கான உயர் ஆணையகம் தெரிவித்துள்ளது.

இவர்கள் கடந்த 2015 ஆம் ஆண்டுமுதல் இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் நாடு திரும்பியுள்ளதாக அந்த பிரிவு தெரிவித்துள்ளது.

அத்துடன் கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் 2015 ஆம்ஆண்டு வரை 396 இலங்கை அகதிகள் நாடு திரும்பியுள்ளதாகவும் அந்த பிரிவு குறிப்பிட்டுள்ளது.

மேலும் தமது சொந்த விருப்பின் பேரில் நாடு திரும்ப தயாராகவுள்ள இலங்கை அகதிகள் விண்ணப்பிக்க முடியும் எனவும் ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகளுக்கான உயர் ஆணையகம் தெரிவித்துள்ளது.

refugees-570x399

Related posts: