24,000க்கும் அதிகமான குடும்பங்கள் வறட்சியால் பாதிப்பு!

Wednesday, July 19th, 2017

வவுனியா மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள வறட்சி காரணமாக 24,000க்கும் அதிகமான குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

இதன்படி, 24,507 குடும்பத்தைச் சேர்ந்த 85,771 பேர் இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளதாக, மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் சுட்டிக்காட்டியுள்ளது.

மேலும், மாவட்டத்தில் 667ம் குடும்பங்கள் குடிநீரைப் பெற்றுக் கொள்வதில் சிரமத்தை எதிர்நோக்கியுள்ளதாக தெரியவந்துள்ளது.  எனவே, குடிநீரைப் பெற்றுக் கொள்ள சிரமப்படும் மக்களுக்கு அதனை பெற்றுக் கொடுக்கும் நடவடிக்கைகளை பாதுகாப்பு பிரிவினர் மற்றும் மாவட்ட செயலாளர் அலுவலகமும் மேற்கொண்டுள்ளனர்

Related posts: