15 வயது சிறுமி கடத்தப்பட்டார்: பொலிஸ்நிலையத்தில் முறைப்பாடு!

Tuesday, April 24th, 2018

முல்லைத்தீவில் இருந்து யாழ்ப்பாணம் சென்ற சிறுமி ஒருவர் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

முள்ளியவளை கிழக்கு, 3 ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த சிவநேசன் கஸ்தூரி வயது 15 என்னும் சிறுமியே இவ்வாறு காணாமல் போயுள்ளதாக பெற்றோர் தெரிவித்துள்ளனர்.

யாழ்ப்பாணம், கல்வியங்காட்டு பகுதியிலுள்ள உறவினர் ஒருவரின் வீட்டில் தங்கியிருந்த குறித்த சிறுமி கடந்த 18 ஆம் திகதி மர்மமான முறையில் கடத்திச் செல்லப்பட்டதாக கோப்பாய் பொலிஸ்நிலையத்தில் முறைப்பாடு ஒன்று பதியப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் குறித்த சிறுமி தொடர்பில் இதுவரை எவ்வித தகவல்களும் கிடைக்கவில்லை என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இதனிடையே முள்ளியவளையில் வசிக்கும் குறித்த சிறுமியின் தாயார் சிறுவர் பாதுகாப்பு பிரிவினரிடம் தனது 15 வயது மகளை கண்டுபிடித்து தரும்படி கோரிக்கை விடுத்துள்ளமைகுறிப்பிடத்தக்கது.

Related posts: