10ஆது நாளாக இன்றும் அரச சேவை தொழில் அதிகாரிகள் சங்கம் பணிப்பகிஷ்கரிப்பு!

Friday, November 11th, 2016

தமது கோரிக்கைகள் பலவற்றுக்கு தீர்வு கிடைக்காததால் அரச சேவை தொழில் அதிகாரிகள் சங்கம் 10ஆது நாளாக இன்றும் பணிப்பகிஷ்கரிப்பு நடவடிக்கையை மேற்கொள்ளவுள்ளதாக அச்சங்கம் அறிவித்துள்ளது.

சேவை யாப்பு தயாரித்தல் உள்ளிட்ட பல கோரிக்கைகளுக்கு தீர்வு பெற்றுத்தருமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் நேரடியாக பேச்சுவார்த்தை நடாத்தியும் இன்று வரையும் தீர்வு கிடைக்காததால் மீண்டும் கொழும்பு தொழிற்சங்கத்திற்கு முன்பாக போராட்டத்தை ஆரம்பித்துள்ளதாக சங்கத்தின் தலைவர் ஐ.சீ. கமககே தெரிவித்துள்ளார்.

இவ்வாறு போராட்டங்கள் தொடர்ந்தால் நாட்டின் அரச செயற்பாடுகள் அனைத்தம் ஸ்தம்பிதம் அடையும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.முன்னர் முன்னெடுக்கப்பட்ட போராட்டம் அதிகாரிகளின் வாக்குறுதியினால் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டது. அவ்வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாததனால் இன்று முதல் மீண்டும் போராட்டம் முன்னெடுக்கப்படுவதாகவும் அச்சங்கம் குறிப்பிட்டுள்ளது.

456

Related posts: