ஹஜ் யாத்திரையை மேற்கொள்ள 60 ஆயிரம் பேருக்கு மட்டுமே அனுமதி – சவுதி அரசாங்கம் அறிவிப்பு!

Monday, June 14th, 2021

உலகை அச்சுறுத்தும் கொரோனா பரவல் காரணமாக இவ்வாண்டக்கான ஹஜ் யாத்திரையை மேற்கொள்ள 60 ஆயிரம் பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படவுள்ளதாக சவூதி அரேபிய அரசு தெரிவித்துள்ளதாக அந்நாட்டின் அரச ஊடகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புனித ஹஜ் யாத்திரைக்கு அனுமதிக்கப்படுவோரில் மூன்றில் இரண்டு பங்கினர் சுமார் 160 நாடுகளைச் சேர்ந்தவர்களாக இருப்பது வழக்கம். இந்த ஆண்டு ஹஜ் யாத்திரை ஜூலை மாதம் மத்தியில் ஆரம்பமாகவுள்ளது.

தற்போது கொரோனா பெருந்தொற்று பரவலால், இந்த ஆண்டு உள்நாட்டினர் 60 ஆயிரம் பேர் மட்டுமே ஹஜ் யாத்திரை மேற்கொள்ள அனுமதிக்கப்படுவர் என்றும் இந்த முடிவை ஹஜ் அமைச்சகமும், உம்ராவும் இணைந்து எடுத்துள்ளதாகவும் குறித்த ஊடக செய்திக் கறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேநேரம் கடந்த ஆண்டே, வெளிநாட்டிலிருந்து சவூதி அரேபியா சென்று வசித்து வந்த சில பேர் இந்த ஆண்டின் ஹஜ் புனித பயணத்துக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளதாகவும் அந்தச் செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: