வெளியேறினார் சந்திமல்!

Tuesday, July 25th, 2017

உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த இலங்கை டெஸ்ட் அணித்தலைவர் தினேஸ் சந்திமால் மருத்துவமனையில் இருந்து வெளியேறியுள்ளார்.

நேற்றைய தினம் அவர் இவ்வாறு வெளியேறியுள்ளதாக இலங்கை கிரிக்கட் சபையின் மருத்துவப் பரிந்துரை பிரிவின் உறுப்பினரான பேராசிரியர் அர்ஜுன சில்வா தெரிவித்துள்ளார்.

காய்ச்சல் காரணமாக சந்திமால் தனியார் மருத்துவமனையொன்றில் அனுமதிக்கப்பட்ட நிலையில் , பின்னர் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளின் போது அவருக்கு நிமோனியா ஏற்பட்டுள்ளது தெரியவந்தது.

அதன்படி , சிகிச்சை பெற்றுவந்த சந்திமாலுக்கு , நோய் நிலைமை குறைவடைந்துள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.மேலும் ,சந்திமாலை பரிசோதித்த மருத்துவர் அர்ஜுன சில்வாவின் பரிந்துரையின் படி அவர் வீடு சென்றுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அவர் , சுமார் ஒரு வாரக்காலம் ஓய்வு பெற வேண்டும் என பேராசிரியர் மருத்துவர் அர்ஜுன சில்வா எமது செய்திச் சேவைக்கு தெரிவித்திருந்தார்.அதன்படி , இலங்கைஇந்தியா அணிகளுக்கிடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் சந்திமால் விளையாடுவார் என தான் நம்புவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.இலங்கை மற்றும் இந்தியா அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி நாளை மறுநாள் காலி சர்வதேச விளையாட்டரங்களில் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: