வெளிநாடுகளில் நிரந்தர குடியுரிமை பெறுவதற்கு பிரச்சினையை தூண்டுகின்றனர்-  நாடாளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரன்!

Tuesday, January 9th, 2018

புலம்பெயர்ந்து மேலைத்தேய நாடுகளில் உள்ள ஒருசிலர் தங்களிற்கு நிரந்தர குடியுரிமை கிடைக்க வேண்டும் என்பதற்காக இங்குள்ளவர்களுக்கு பணம் வழங்கி மீண்டும் ஒரு போராட்டத்தை ஆரம்பிக்க முயற்சிகள் மேற்கொள்கின்றார்கள்  என தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சதாசிவம் வியாழேந்திரன் தெரிவித்தார் .

மட்டக்களப்பில் நடைபெற்ற மக்கள் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் தெரிவித்ததாவது: மேலைத்தேய நாடுகளிலிருந்து போராட்டத்தை தூண்டுவதற்கு முயற்சிப்பவர்கள் தங்கள் பிள்ளைகளை போராட்டத்தி;ற்கு அனுப்ப முடியுமா? இனியொருபோதும் எங்கள் சழூகத்தை இந்த மண்ணிலே இழப்பதற்கு நாங்கள் தயாரில்லை. நாங்கள் கல்வி பொருளாதார  ரீதியில் முன்னேற்றமடைய வேண்டும் என தெரிவித்துள்ளார்.

Related posts:

கொரோனா தொற்றுக்கு மத்தியில் பௌத்தர்களின் உயர்ந்த பண்பினை உலகிற்கு எடுத்துக்காட்டுவதற்கு கிடைத்த சிறந...
அரச நிர்வாகத்தை சீரமைக்க அனைவரும் உறுதியளித்துள்ளனர் - அரச ஊழியர்கள் வசதியான உடையில் வரலாம் என்ற சுற...
சீனா இலங்கையின் நண்பன் ஆனால் இந்திய நலன்களுக்கு எதிராக சீனா செயற்பட இலங்கை அனுமதிக்காது - அமைச்சர் அ...