வீட்டுத்திட்டத்திற்கு விண்ணப்பித்து பயனாளியாக தேர்வு செய்யப்படாத மக்கள் பிரதேச செயலகங்களில் முறையிட்டலாம் – மாவட்ட செயலகம் அறிவிப்பு!
Wednesday, July 7th, 2021யாழ்.மாவட்டத்தில் வீட்டுத்திட்டத்திற்கு விண்ணப்பித்து பயனாளியாக தேர்வு செய்யப்படாத மக்கள் பிரதேச செயலகங்களில் முறையிட்டால் அது தொடர்பான விளக்கம் எழுத்துமூலம் வழங்கப்படும்என யாழ்.மாவட்ட செயலகம் தெரிவித்துள்ளது.
யாழ் மாவட்டத்தில் வீட்டுத்திட்ட பயனாளிகள் தெரிவில் தொடர்ச்சியாக முறைப்பாடுகள், மற்றும் விமர்சனங்கள் எழுந்துவரும் நிலையிலேயே மாவட்ட செயலகம் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளது.
மேலும் – வீட்டுத்திட்ட பயனாளிகள் தேர்வு மீண்டும் தொடக்கத்திலிருந்து நடப்பதாக சிலர் தவறாக நினைக்கிறார்கள். ஆனால் பயனாளிகள் தேர்வு தொடர்பாக சகல பிரதேச செயலர்களுக்கும் தெளிவான சுற்றறிக்கை அனுப்பிவைக்கப்பட்டிருக்கின்றது. அதன் அடிப்படையிலேயே தெரிவுகள் நடக்கிறது.
சில சமயங்களில் அதிகாரிகளுக்கு சில புரிதல்கள், தெளிவுகளில் தாமதங்களை உருவாக்கியிருக்க கூடும். அவ்வாறான சந்தர்ப்பங்களில் கால அவகாசம் வழங்கி சரியான பயனாளியை தெரிவு செய்ய அறிவுறுத்தப்பட்டிருக்கின்றது.
எனவே வீட்டுத்திட்ட பயனாளியாக தேர்வு செய்யப்படாதோர் அது குறித்த உண்மையை அறிய விரும்பினால் உங்கள் பகுதி பிரதேச செயலரிடம் தொடர்பு கொண்டால் அவர்கள் எழுத்துமூல விளக்கம் தருவார்கள். அதற்கான அறிவுறுத்தல் சகல பிரதேச செயலர்களுக்கும் அனுப்பபட்டுள்ளது. எனவே எழுத்துமூல விளக்கத்தை பெற்றால் அது தேவையற்ற பிரச்சினைகளை உருவாக்காது, தவறுகள் நடந்திருப்பின் சுட்டிக்காட்ட பயனாளிக்கும் உதவியாக இருக்கும் எனவும் மாவட்ட செயலகம் குறிப்பிட்டுள்ளது. முன்பதாக யாழ் மாவட்டத்தில் வீட்டுத் திட்ட பயனாளர் தெரிவில் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு இணைத் தலைவரது தலையீடு காரணமாக அதிகாரிகளுக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டதாக தகவல்கள் வெளிவந்திருந்த நிலையில் அது தொடர்பில் பிரதமரின் வடக்கு கிழக்கிற்கான விசேட இணைப்பாளரது தலையீடு காரணமாக உண்மை நிலை கண்டறியப்பட்டதை அடுத்து அரச அதிகாரிகளுக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டு முன்மொழியப்பட்ட தெரிவுகளை நீக்கி உண்மைத்தன்மையுடன் வெளிப்படையாக தெரிவுகளை உரிய பயனாளிகளுக்கு வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது
Related posts:
|
|