வீடமைப்புப் புரட்சியை நாம் மேற்கொண்டு வருகின்றோம் – சஜித் பிரேமதாஸ

Sunday, March 6th, 2016

வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சர் சஜித் பிரேமதாஸ இன்று ஹம்பாந்தோட்டை பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டிருந்தார்.

பெண்களுக்கான சுயதொழில் நடவடிக்கைகளுக்கென தையல் இயந்திரங்கள் வழங்கும் இந்த நிகழ்வு ஹம்பாந்தோட்டை நிப்பாராம புராண விகாரையில் இன்று முற்பகல் இடம்பெற்றது.

இதன்போது அமைச்சர் தெரிவித்ததாவது,

எமது பாரிய வீடமைப்புப் புரட்சியை நாம் மேற்கொண்டு வருகின்றோம். இந்தப் புரட்சியானது வெறுமனே வாய்ப்பேச்சல்ல, கண்களால் பார்க்கின்ற, செவிகளுக்கு கேட்கின்ற, இதயங்களுக்குப் புரிகின்ற வீடமைப்புப் புரட்சியே இது. முன்னைய அரசாங்கம் கைவிட்டிருந்த வீடுகளை எமது அதிமேதகு ஜனாதிபதி மற்றும் கௌரவ பிரதமர் ஆகியோருடைய தலைமையின் கீழ், இந்நாட்டின் வறிய மக்களின் இரு கால்களுக்கும் அருகே கொண்டு செல்வது திண்ணம் என்பதைக் குறிப்பிட விரும்புகின்றேன். 2025 இல் இந்நாட்டில் அனைவருக்கும் நிழல் பெற்றுக்கொடுக்க எமது அரசு முழு மனதுடன் செயற்படும் என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கிறேன்

Related posts: