விபத்தில் காயமடைந்தவர் சிகிச்சை பயனின்றிச் சாவு!

Friday, January 18th, 2019

மோட்டார் சைக்கிள் விபத்தில் படுகாயமடைந்து யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்றுவந்த பெண்மணி 11 தினங்களின் பின்னர் உயிரிழந்துள்ளார்.

அச்சுவேலி தெற்கைச் சேர்ந்த திருமதி குணராசா அஜநதி (வயது39) என்ற பெண்ணே உயிரிழந்துள்ளார்.

ஆவரங்கால் – வல்லை முதன்மை வீதியில் பெரிய மதவடி பகுதியில் கடந்த 6 ஆம் திகதி விபத்துக்குள்ளானார்.

பெண் மேற்படி தனது இல்லத்துக்குச் செல்வதற்கு வீதியைக் கடப்பதற்கு முற்பட்ட வேளையில் வடமராட்சி நோக்கிவந்த இளைஞனின் உந்துருளி மோதியதில் படுகாயமடைந்தார்.

இந்த விபத்தில் இரண்டு பெண்களும் இரண்டு இளைஞர்களுமாக நான்குபேர் படுகாயமடைந்தனர்.

Related posts: