வாள்வெட்டு தாக்குதல்களில் – பெண் உட்பட ஏழு பேர் காயம் !

Monday, July 2nd, 2018

வாள்வெட்டு மற்றும் தாக்குதலுக்கு இலக்காகி நாவற்குழியில் குடும்பப்பெண் உட்பட ஏழு பேர் காயமடைந்துள்ளனர் என்றும் காயமடைந்தவர்களில் சிலர் தாக்குதலை சமாதானப்படுத்த முற்பட்டபோதே தாக்குதலுக்கு இலக்காகினர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் நேற்று முன்தினம் இரவு யாழ்ப்பாணம் நாவற்குழியில் உள்ள 300 வீட்டுத்திட்டப் பகுதியில் இடம்பெற்றது.

வெட்டுக்காயங்களுக்கு இலக்கான றஜிதா (வயது 46), அவரது மகனான துரை (வயது 20), ஆகியோர் யாழ் போதனா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். முத்துக்குமாரு ரமணன் (வயது 19), ஜெயசீலன் றொஸான் (வயது 20), யோகராசா சிவனேஸ்வரன் (வயது 24), தர்மபாலன் சுகுமார் (வயது 21), நியூட்டன் விதுஸன் (வயது 21) ஆகியோர் சாவகச்சேரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இரு பகுதியினருக்கிடையில் ஏற்பட்ட மோதல் சம்பவத்திலேயே வாள்வெட்டுத் தாக்குதல் இடம்பெற்றுள்ளது. மகனைத் தாக்குவதை அறிந்த தாய் அங்கு சென்ற வேளையில் வாள்வெட்டுக்கு இலக்காகி காயமடைந்தார். மேலும் சிலர் விலக்குப் பிடிக்கப்போகும் போதே தாக்கப்பட்டனர். இந்தச் சம்பவம் தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஏனையோர் தப்பியோடியுள்ளனர் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

Related posts: