வாடகைக்கு வாகனங்களை பெற்று அடகு வைத்த மோசடி நபர் கைது!

Friday, November 11th, 2016

வாடகைக்கு வாகனங்களைப் பெற்று அடகு வைத்து வந்த நபர் ஒருவர் பொலிஸாரிடம் வசமாக மாட்டிக்கொண்டார். இந்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது:

சவகச்சேரியைச் சேர்ந்த நபர் ஒருவர் பல்வேறு தரப்பினரிடம் வாடகைக்கு வாகனங்களை பெற்று அவற்றை அடகு வைத்து பணத்தைப் பெற்று வந்துள்ளார். வாகனச் சாரதிகள் தொடர்பு கொண்டால் குறித்த முகவரியில் அவர் இல்லை என்றே தெரியவந்துள்ளது.

இதே போன்று சம்பவம் ஒன்று அண்மையில் அராலி மத்தியில் இடம்பெற்றுள்ளது. அந்த நபர் அராலி மத்தியைச் சேர்ந்தவர் ஒருவரிடம் வான் ஒன்றைக் கொடுத்து 4லட்சம் ரூபா பணம் பெற்றுள்ளார். நாள்கள்; கடந்த சிலையில் பணத்தை மீளப்பெறும் நோக்கில் அராலி மத்தியைச் சேர்ந்தவர் கடனாளிக்கு தொலைபேசி அழைப்பை ஏற்படுத்தினார்.

அப்போது அந்த இலக்கம் சேவையில் இல்லை என்று தெரியவந்துள்ளது. இது தொடர்பாக வட்டுக்கோட்டைப் பொலிஸில் கடந்த 8ஆம் திகதி அவர் முறைப்பாடு செய்தார். பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டபோது குறித்த வானத்தை அடகு வைத்தவர் என்று கூறப்படும் நபர் சாவகச்சேரி பொலிஸாரால் இவ்வாறான பிரச்சினைகளுக்காக ஏற்கனவே கைதாகி விசாரணைக்கு உட்படுத்தப்பட்டவர் என்பது தெரியவந்துள்ளது, அராலியில் அடகு வைக்கப்பட்ட வாகனத்தின் உரிமையாளர் சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் அந்த மோசடி நபர் சாவகச்சேரி பொலிஸாரால் கைது செய்யப்பட்டார். அவரின் மோசடி தொடர்பாக சாவகச்சேரி பொலிஸாரால் தொடர்ந்தும் விசாரணைகள் நடைபெற்று வருகின்றது.

arrest_1_0_mini-720x480

Related posts: