வாசிப்பு மாதத்தையொட்டி மாணவரிடையே போட்டிகள்!

Thursday, October 20th, 2016

யாழ்ப்பாணம் பொதுசன நூலகத்தினால் வாசிப்பு மாதத்தை ஒட்டி மாணவர்களிடையே போட்டிகள் நடத்தப்படவுள்ளன. எதிர்வரும் 23ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 9மணிக்கு கீழ்பிரிவினருக்கான கதை கூறல் போட்டியும் முற்பகல் 10 மணிக்கு கீழ்பிரிவினருக்கான தமிழ் வாசிப்பு மற்றும் ஆங்கில வாசிப்பு போட்டிகளும், மத்திய பிரிவினருக்கான கிரகித்தல் போட்டியும் மேற் பிரிவுக்கான பொது அறிவு போட்டியும் நடைபெறவுள்ளன.

இப்போட்டிகள் கீழ்பிரிவு ஒன்று 4வயது மற்றும் 5வயதிற்குட்பட்டோரும் கீழ்பிரிவு இரண்டு 6வயது மற்றும் 7வயதிற்குட்பட்டோரும், மத்திய பிரிவு 8வயது முதல் 10 வயதிற்குட்பட்டோரும் மேற்பிரிவு ஒன்று 11 வயது மற்றும் 12 வயதினரும், மேற்பிரிவு இரண்டு 13வயது மற்றும் 14 வயதினரும் பங்குபற்ற முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

book2

Related posts: