வவுனியாவில் கடந்த 10 மாதங்களில் 778 வர்த்தகர்களுக்கு எதிராக வழக்கு!

Tuesday, November 22nd, 2016

வவுனியாவில் கடந்த ஜனவரி தொடக்கம் அக்டோபர் வரையிலான காலப்பகுதியில் 778 வர்த்தகர்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக வவுனியா மாவட்ட பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபை தெரிவித்துள்ளது.

குறிக்கப்பட்ட விலையைவிடக் கூடுதலான விலைக்கு பொருட்களை விற்பனை செய்தமை, கட்டுப்பாட்டு விலையை விட கூடுதலான விலைக்குப் பொருட்களை விற்பனை செய்தமை, காலாவதியான பொருட்களை விற்பனைக்கு காட்சிப்படுத்தியமை, காலாவதியான பொருட்களை விற்பனை செய்தமை, விலைகளை காட்சிப்படுத்தாமல் அத்தியாவசியப் பொருட்களை விற்பனை செய்தமை, இறக்குமதியாளர் மற்றும் விநியோகத்தர் ஆகக் கூடிய விலை என்பன குறிப்பிடாது பொருட்களை விற்பனை செய்தமை, பொருட்களில் உள்ள விலையை அழித்து அதிகரித்த விலை சுட்டுத்துண்டு ஒட்டியமை, பொருட்களை விற்பனை செய்யும்போது மிகுதிப் பணத்திற்குப் பதிலாக மாற்றுப்பண்டம் வழங்கியமை என்பவற்றுக்கு எதிராகவே குறித்த வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இதன்படி இவ்வாண்டு ஜனவரி மாதம் முதல் ஆகஸ்ட் மாதம் வரை வவுனியா, மன்னார், முல்லைத்தீவு, கிளிநொச்சி மாவட்டங்களைச் சேர்ந்த 144 வர்த்தகர்களுக்கு எதிராகவும் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபை தெரிவித்துள்ளது.

post-1035 copy

Related posts: