வலிகாமத்தில் சிறுபோக வெங்காய அறுவடை மும்முரம்

Wednesday, July 19th, 2017

யாழ். வலிகாமம் பிரதேசத்தில் சிறுபோக வெங்காய அறுவடை தற்போது மும்முரமாக இடம்பெற்று வருகிறது. வெங்காயத்தின் அமோக விளைச்சல் மற்றும் வெங்காயத்தின் அதிகரித்த விலை என்பன காரணமாக வலிகாமம் பிரதேச விவசாயிகள் இரட்டிப்பு மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
வலிகாமத்தில் ஏழாலை, குப்பிளான், குரும்பசிட்டி, கட்டுவன், வசாவிளான், ஈவினை, புன்னாலைக்கட்டுவன், மயிலங்காடு, சூராவத்தை, சுன்னாகம், மருதனார்மடம், இணுவில், ஊரெழு, உரும்பிராய், நீர்வேலி, இருபாலை, கோப்பாய்,கோண்டாவில், புத்தூர்,நவக்கிரி, அச்செழு உள்ளிட்ட பகுதிகளில் பல ஏக்கர் நிலப் பகுதியில் விவசாயிகள் வெங்காயச் செய்கையில் ஈடுபட்டிருந்த நிலையில் வெங்காய அறுவடை தற்போது மும்முரமாக இடம்பெறுகிறது. 
தற்போது  ஒரு கிலோ வெங்காயம் 200 ரூபாவாக விவசாயிகளிடமிருந்து வியாபாரிகளால்  கொள்வனவு செய்யப்படுகின்றது. யாழ். குடாநாட்டிலிருந்து பெருமளவு வெங்காயம் வெளிமாவட்டங்களிற்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றமையே விலை உயர்விற்குக் காரணமெனத் தெரிவிக்கப்படுகின்றது.

Related posts: