வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்தின் கும்பாபிஷேகத்துக்கான ஏற்பாடுகள் முழுமை!

Thursday, March 22nd, 2018

முல்லைத்தீவு வற்றாப்பளை அம்மன் ஆலய கும்பாபிஷேக நிகழ்வுக்கான அனைத்து ஏற்பாடுகளும் முழுமையாக்கப்பட்டுள்ளன என்று ஆலய பரிபாலன சபையினர் தெரிவித்தனர்.

எதிர்வரும் 30 ஆம் திகதி கும்பாபிஷேகம் இடம்பெறவுள்ளதால் எதிர்வரும் 27, 28, 29 ஆகிய திகதிகளில் எண்ணைக்காப்பு சாத்தும் வைபவம் இடம்பெறவுள்ளது.

இந்த ஆலயத்துக்கு அனைத்து மாவட்ட மக்களும் வருகை தர உள்ள நிலையில் அங்கு குடிநீர், சுகாதார வசதிகள் என அனைத்து ஏற்பாடுகளும் முழுமை பெற்றுள்ளன எனவும் பரிபாலன சபையினர் தெரிவித்தனர்

Related posts: