வடக்கில் இனவிருத்தி, விழிப்புணர்வு நிகழ்ச்சித்திட்டம்!

ஏ.எப்.டி மற்றும் மெடிசின்டு மென்டோ எம்.டி எம். உலக வைத்தியர்களின் வலையமைப்பு இணைந்த நிதியுதவியுடன் கிளிநொச்சி நண்பர்கள் விருந்தினர் விடுதியில் 23-10-2018 அன்று காலை 09.30 மணி தொடக்கம் பிற்பகல் வரை பாலியல் மற்றும் இனவிருத்தி நிகழ்ச்சித்திட்டம் இடம்பெற்றுள்ளது.
இந்;நிகழ்ச்சித் திட்டத்தில் விழிப்புணர்வு பயிற்சிகள், விளையாட்டுப்போட்டிகள், மக்கள் சந்திப்புக்கள் இதன்மூலம் எச்.ஐ.வி தொற்று மற்றும் விழிப்புணர்வுகள் என பல்வேறு விடயங்கள் அவற்றின் முன்னேற்றங்கள் பற்றி தெளிவுபடுத்தப்பட்டது.
இந் நிகழ்வில் தொழில்நிலை பிரதிநிதி போலின் கெரியர் லபார்கியு மற்றும் சிரேஷ்ட உதவித்திட்ட பரிந்துரை முகாமையாளர் நிலுசா பட்டப்பண்டி மற்றும் மார்ட்டின் பேரன்ட் உட்பட வடமாகா வைத்தியர்கள், சமூக வலுவூட்டாளர்கள், அரச சகாதார மற்றும் கல்வி அதிகாரிகள், தன்னார்வத் தொண்டர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர். இந் நிகழ்ச்சி கடந்த மூன்று வருடங்களாக பிரான்ஸை சேர்ந்த ஏ.எப்.டி மற்றும் மெடிசின்டு மென்டோ எம்.டி எம். உலக வைத்தியர்களின் வலையமைப்பின் இணைந்த நிதியுதவியுடன் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|