லைலா மற்றும் சுருக்கு வலைகளுக்கு தற்காலிகத்தடை!

Friday, November 4th, 2016

புத்தளம் மாவட்டத்தில் லைலா மற்றும் சுருக்கு வலைகளை பயன்படுத்த புத்தளம் நீதவான் நீதிமன்றம் தற்காலிகத்தடை விதித்துள்ளது.

கல்பிட்டி – கந்தக்குளி பிரதேசத்தில்  இரு மீனவக்குழுக்களிடையில் இடம்பெற்ற மோதல் சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணை நேற்று நீதிமன்ற விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது குறித்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் குறித்த வழக்கு விசாரணை நிறைவடையும் வரையில் மேற்குறித்த வலைகளை பயன்படுத்துவதற்கு நீதிமன்றம் தடை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

குறித்த வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்பட்ட போது ஆயிரக்கணக்கான மீனவர்கள் நீதிமன்ற வளாகத்துக்குள் வருகைத்தந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

asd1

Related posts: