றோயல் கல்லூரி பெயர்பட்டியல் வெளியிடப்பட வேண்டும் – ஆசிரியர் சங்கம்!
Monday, January 16th, 2017கொழும்பு றோயல் கல்லூரியில் முதலாம் ஆண்டுக்கு மாணவர்களை சேர்ந்துக்கொள்வதற்கான திருத்தப்பட்ட பெயர் பட்டியல் பகீரங்கமாக வெளியிடப்பட வேண்டும் என இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது.
அந்த சங்கத்தின் பொது செயலாளர் ஜோசப் ஸ்டாலினின் கையொப்பத்துடனான அறிக்கையொன்றில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2017 ஆம் ஆண்டுக்காக முதலாம் தரத்தில் மாணவர்களை உள்வாங்கும் போது 147 பேர் தொடர்பில் அவர்களின் இருப்பிடம் பற்றிய விசாரணையின் பின்னர் 31 பேரை அகற்றியதுடன் ஏனையவர்களுக்கு எதிர்வரும் 16 ஆம் திகதி வகுப்புகளை ஆரம்பிக்கவுள்ளதாக கல்வியமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்திருந்தார்.
முறையற்றவகையில் அகற்றப்பட்ட மாணவர்கள் 31 பேருக்கு பதிலாக சேர்க்கப்பட்ட 31 பேரின் பெயர் பட்டியலை உடனடியாக வெளியிட வேண்டும் என இலங்கை ஆசிரியர் சங்கம் கோரியுள்ளது.
Related posts:
கிரிக்கெற் வீரர் ரமித் ரம்புக்வெல்ல பிணையில் விடுதலை!
ஆயுதங்களுடன் வீடு புகுந்து மூளாய் பகுதியில் 17 பவுண் நகை கொள்ளை !
பாடசாலைகளில் ஆசிரியர், மாணவர்களின் வருகை எதிர்பார்த்ததைவிட அதிகளவில் உள்ளது - ஆசிரியர்கள் மாகாணங்கள...
|
|