ரயில் தண்டவாளம் அருகே படுத்தவரின் கை பறிபோனது – கொக்குவில் புகையிரத நிலையமருகே விபத்து!

Thursday, December 20th, 2018

கொக்குவில் புகையிரத நிலையம் அருகே ரயில் தண்டவாளத்துக்கு அருகில் உறங்கியவர் ஒரு கையை இழந்தார். ரயில் சக்கரம் கையில் ஏறியதில் அவரது ஒரு கை முற்றாகச் சிதைந்தது.

எஸ்.லிங்கேஸ்வரன் வயது (61) என்பவரே கையை இழந்தவர் ஆவார். கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் வந்த புகையிரத சக்கரத்தில் சிக்கியே இந்த விபத்து இடம்பெற்றது.

காயமடைந்த நிலையில் கொக்குவில் புகையிரத நிலையத்தில் விழுந்து கிடந்த இவரை மீட்ட கோப்பாய் பொலிஸார் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதித்தனர்.

சிதைவடைந்த அவரது கை சத்திர சிகிச்சை மூலம் உடனடியாக அகற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Related posts: