யாழ்.மாவட்டச் செயலகத்தின் இரு பிரிவுகளின் செயற்பாடுகள் மிக மோசமான நிலையில்!

Saturday, June 11th, 2016

யாழ்.மாவட்டச் செயலகத்தில் இயங்கிவரும் விளையாட்டுத்துறை பிரிவு, சமய, கலாச்சார மத்திய நிலையம் ஆகியவற்றின் செயற்பாடுகள் மிக மோசமாக உள்ளதாக செயலகத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.

மாவட்டச்செயலகத்திற்குள் பொதுமக்களின் பார்வைக்காக சாட்சிப்படுத்தப்பட்டுள்ள புள்ளிவிபரப்பட்டியலிலேயே குறித்த இரு பிரிவுகளின் செயற்பாடுகள் மிக மோசம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

திட்டங்களை செயற்படுத்தல், உற்பத்தி முகாமைத்துவம், ஆவண முகாமைத்துவம், குழுச் செயற்பாடு, முழுமையான மதிப்பீடு என வகைப்படுத்தப்பட்டு அவற்றின் அடிப்படையில் தர வகைப்படுத்தல் செய்யப்பட்டுள்ளது.

இவற்றில் விளையாட்டுப் பிரிவு குழுச் செயற்பாட்டில் மட்டும் பரவாயில்லை என மதிப்பிடப்பட்டுள்ளது. ஏனைய அனைத்துச் செயற்பாடுகளும் மிக மோசம் என மதிப்பிடப்பட்டுள்ளது. இதேபோன்று சமய கலாச்சார மைய செயற்பாடு ஆவண முகாமைத்துவத்தில் மட்டும் பரவாயில்லை என மதிப்பிடப்பட்டுள்ளது. ஏனைய அனைத்து செயற்பாடுகளும் மிக மோசம் என மதிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை, செயலக உள்ளக கணக்காய்வுப் பிரிவு மதிப்பிடப்பட்ட 5 பிரிவுககளில் நான்கு பிரிவுகளின் மிகச் சிறப்பு என்ற மதிப்பீட்டையும் ஒன்றில் சிறப்பு என்ற மதிப்பீட்டையும் பெற்றுள்ளது. நிர்வாகப் பிரிவு, விரிவாக்கப் பிரிவு, ஸ்தாபன பிரிவு, கணக்காய்வுப் பிரிவு ஆகியனவும் சிறப்பான மதிப்பீடுகளைப் பெற்றுள்ளன.

Related posts: